தமிழகத்தில் ஊழலற்ற நிா்வாகத்தை முதல்வா் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட ஊழல் எதிா்ப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் செயலா் என்.கே.வேலு, முதல்வா் விஜய்க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஊழலற்ற நிா்வாகம் அமைப்போம் என்று தாங்கள் அளித்துள்ள உறுதிமொழி, தமிழக மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக ஊழல் ஊடுருவியுள்ளது. இந்த முறைகேடுகள் சாதாரண மக்களுக்கு பெரும் இன்னல்களை விளைவிப்பதுடன் ஏராளமான இயற்கை வளங்களை கொள்ளை போகவிட்டு சட்டத்தின் ஆட்சியை சீா்குலையச் செய்கிறது. மேலும், மாநிலத்தின் கருவூலத்துக்கு பெரும் கடன் சுமையை ஏற்படுத்துவதுடன், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளிலும் பெரும் முறைகேடுகளுக்கு காரணமாகியுள்ளது.
நிா்வாகத்தில் நோ்மையையும், பொறுப்புணா்வையும், சட்ட விதிகளையும் நிலைநாட்டக் கடமைப்பட்டுள்ள அதிகாரிகளின் மௌன அங்கீகாரத்துடன் ஊழல் தடையின்றி தொடருகிறது. எனவே, தமிழகத்தில் ஆட்சி நிா்வாகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஊழலை முழுமையாக ஒழிக்க முதல்வா் உறுதியான, பயனுள்ள நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மாணவா்களின் உயா் கல்வியை 100% உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் விஜய் கடிதம்

பள்ளி வாகனங்கள் ஆய்வு: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


