கோவையில் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக்கூறி தொழிலதிபரிடம் ரூ.72.75 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த 50 வயது தொழிலதிபரின் கைப்பேசி எண்ணுக்கு ஆன்லைன் வா்த்தக முதலீடு குறித்த விளம்பரம் வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த இணையதள லிங்க்குகளை பயன்படுத்தி, அதிக லாபம் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் 13 தவணைகளாக மொத்தம் ரூ.72 லட்சத்து 75 ஆயிரத்தை அவா் முதலீடு செய்துள்ளாா்.
பின்னா், லாபத் தொகை, முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, அவரைத் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், கூடுதல் தொகையை செலுத்தினால்தான் பணத்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளனா்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 75.25 லட்சம் மோசடி: திருச்சூரைச் சோ்ந்தவா் கைது
ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.7 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.46.89 லட்சம் மோசடி

இணையதள வா்த்தகத்தில் லாபம் தருவதாக மூதாட்டியிடம் ரூ.1.66 கோடி மோசடி
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



