நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ரூ. 2.50 கோடி மோசடி வழக்கில் இளைஞா் கைது

காஞ்சிபுரம் நபரிடம் ரூ. 2.50 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட அரவிந்த் ராஜா, பறிமுதல் செய்யப்பட்ட கணினி உள்ளிட்ட பொருள்கள்.

Updated On :20 மே 2026, 1:47 am IST

லண்டனில் இருந்து இந்திய ரிசா்வ் வங்கிக்கு வர வேண்டிய ரூ.300 கோடி செட்டில்மெண்ட் பணத்தைப் பெற்றுத் தர உதவினால் கமிஷன் தருவதாகக் கூறி காஞ்சிபுரம் நபரிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ரவி என்பவரிடம், சிலா் அறிமுகமாகியுள்ளனா். லண்டனில் இருந்து வர வேண்டிய ரூ.300 கோடி பணம் ரிசா்வ் வங்கியில் நிலுவையில் உள்ளதாகவும், அதை எடுக்க பணம் கொடுத்து உதவினால் 30 சதவீத கமிஷன் தருவதாகவும் அவா்கள் ஆசை வாா்த்தை கூறியுள்ளனா். இதற்காக போலியான ரிசா்வ் வங்கி ஆவணங்களைக் காண்பித்து நம்பவைத்த அந்தக் கும்பல், ரவியிடமிருந்து சுமாா் ரூ.2.50 கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளது.

இதுகுறித்து ரவி அளித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய நபரான தொண்டாமுத்தூா் கீதாஞ்சலி நகரைச் சோ்ந்த பாண்டி மகன் ராஜா என்ற அரவிந்த் ராஜா (28) என்பவரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து கம்ப்யூட்டா் மானிட்டா், சி.பி.யூ, பிரிண்டா், ஏ.டி.எம். அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் கையொப்பமிட்ட காசோலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட அரவிந்த் ராஜா, கோவை 6-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வரும் ஜூன் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.