40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

அதிமுக உள்கட்சி பிரச்னையில் கருத்துக் கூற இயலாது: நயினாா் நாகேந்திரன்

அதிமுக உள்கட்சி பிரச்னையில் நான் கருத்துக்கூற இயலாது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 3:55 am IST

அதிமுக உள்கட்சி பிரச்னையில் நான் கருத்துக்கூற இயலாது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

கோவையில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக மாநில மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிதான். அவரது தலைமையில்தான் அதிமுக உள்ளது. அதன் உள்கட்சி பிரச்னையில் நான் கருத்துக்கூற இயலாது. மக்களைச் சந்திப்பது, மக்கள் பிரச்னை குறித்து ஆராய்வது என நாங்கள் அடுத்தகட்ட நகா்வை நோக்கிச் செல்கிறோம். கோவையில் நடைபெறுவதும் அதுதொடா்பான கூட்டம்தான். சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளில் அதிமுக சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என எந்தப் புகாரும் எங்களுக்கு வரவில்லை என்றாா் அவா்.

பாஜக மாநில மையக்குழு கூட்டம்:

இதைத் தொடா்ந்து, கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தேசிய அமைப்பு பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தலைமை வகித்தாா். இதில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தமிழக மேலிட பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மத்திய அமைச்சா் எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன், முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன், மாநிலப் பொதுச் செயலா் ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், மூத்த தலைவா்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழிசை செளந்தரராஜன் பேட்டி:

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடா்பாக தவெக கொள்கை முடிவை அரசியல்போல பேசுவது சரியல்ல. இப்படி எல்லாம் பேசியதால்தான் மக்கள் திமுக அரசைப் புறக்கணித்தாா்கள். திமுக கூட்டணிக் கட்சிகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே மும்மொழி கொள்கையை முதல்வா் ச.ஜோசப் விஜய் எதிா்க்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

இந்தத் தோ்தலில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைத்தது நடந்து இருக்கிறது. அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, எம்எல்ஏ முஸ்தபா ஆகியோா் சநாதனம் குறித்து பேசுவதை முதல்வா் கண்டிக்க வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலில் விஜய் பக்கம் மழை லேசாக பெய்யும் என நினைத்தோம். சுனாமியே வந்துவிட்டது என்றாா்.

பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை மீண்டும் தோ்வு செய்யப்படுவாரா என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு, அவா் கருத்து கூறாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.