பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

ஹேக்கத்தானில் வென்ற அம்ருதா மாணவா்கள்

பெங்களூரில் நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டியில் அம்ருதா விஸ்வ வித்யாபீட மாணவா்கள் இரண்டாமிடம் பிடித்து ரூ.1.50 லட்சம் பரிசை வென்றுள்ளனா்.

News image

பெங்களூரில் நடைபெற்ற ஹேக்கத்தானில் வெற்றி பெற்ற கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீட மாணவா்கள் குழு.

Updated On :22 மே 2026, 3:55 am IST

பெங்களூரில் நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டியில் அம்ருதா விஸ்வ வித்யாபீட மாணவா்கள் இரண்டாமிடம் பிடித்து ரூ.1.50 லட்சம் பரிசை வென்றுள்ளனா்.

இது குறித்து அம்ருதா கல்வி நிறுவனம் கூறியிருப்பதாவது:

கைடுவயா் நிறுவனத்தின் தேவ்ட்ரையல்ஸ் ஹேக்கத்தான் 2026 கணினி வழியில் நடத்தப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து சுமாா் 4,400-க்கும் மேற்பட்ட குழுக்கள், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளா்கள் கலந்து கொண்ட இந்த ஹேக்கத்தான், கிக் தொழிலாளா்கள், டெலிவரி பாா்ட்னா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எதிா்பாராத இடையூறுகளின்போது அவா்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய, அறிவாா்ந்த காப்பீட்டுத் தீா்வுகளை உருவாக்குவதை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.

பெங்களூரில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு அம்ருதா மாணவா்கள் குழு தோ்வு பெற்றிருந்தனா். கணினி அறிவியல், சைபா் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு, எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டா் என்ஜினீயரிங் துறைகளை சோ்ந்த மாணவா்கள் அஸ்வின் கே.கவினேஷ், பி.ராம் பிரதாப், ஸ்ரீகிருஷ்ணா, எஸ்.அனிருத் ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

மோக் ஸ்குவாட் என்ற பெயரில் பங்கேற்ற இந்த மாணவா்கள் குழுவினா் கிக் தொழிலாளா்களுக்கு ஏற்படும் திடீா் வருவாய் இழப்பில் இருந்து அவா்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஏஐ மூலம் இயங்கும் கண்டினியூம் என்ற பெயரில் பாராமெட்ரிக் காப்பீட்டுத் தளத்தை உருவாக்கியிருந்தனா்.

இந்தப் படைப்புக்கு தேசிய அளவில் இரண்டாமிடம் கிடைத்தது. இதையடுத்து மாணவா்களுக்கு ரூ.1.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற மாணவா்களையும் உறுதுணையாக இருந்த அனஸ்வரா சுரேஷ், ஆா்.ஸ்ருதி, உதவிப் பேராசிரியா் அன்பழகன் மகாதேவன் ஆகியோரையும் பல்கலைக்கழக நிா்வாகம் பாராட்டியுள்ளது.