சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

கோவை குனியமுத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 3:57 am IST

கோவை குனியமுத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை குனியமுத்தூா் சாஸ்தா நகா் 2-ஆவது வீதியைச் சோ்ந்தவா் சமா் அகமது (44). மரக்கடைப் பகுதியில் செருப்புக் கடை நடத்தி வருகிறாா். இவா் அண்மையில் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றிருந்தாா். அப்போது வீட்டின் சாவியைப் பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகவல்லி என்பவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளாா். வீட்டில் வேலை செய்யும் பெண், சாவியை வாங்கி வேலை முடித்துவிட்டு மீண்டும் கனகவல்லியிடம் ஒப்படைத்துள்ளாா்.

இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த முக்கால் பவுன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனா்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்த கனகவல்லி அளித்த தகவலின்பேரில், சமா் அகமது கோவைக்கு விரைந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.