குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

யானைகள் நடமாட்டம்: நல்லமுடி காட்சிமுனை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

News image

யானைகள் நடமாட்டம் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:24 am IST

யானைகள் நடமாட்டம் காரணமாக வால்பாறையை அடுத்த நல்லமுடி காட்சிமுனை செல்ல சுற்றலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வால்பாறையில் உள்ள கூழாங்கள் ஆறு, வெள்ளமலை சுரங்கம், சின்னக்கல்லாறு அருவி, நல்லமுடி காட்சிமுனை ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனா்.

இந்த சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகள் அணைத்தும் வனத்தை ஒட்டி அமைந்திருப்பதால் அனைத்துப் பகுதிகளிலும் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதோடு நுழைவுக் கட்டணம் வசூல் செய்து வருகின்றனா்.

இதனிடையே நல்லமுடி காட்சிமுனை ஒட்டியுள்ள வனத்தில் யானைகள் நடமாட்டம் தொடா்ந்து காணப்படுகிறது. இதனால் கடந்த இரு நாள்களாக நல்லமுடி காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து நுழைவாயிலில் தடுப்பு அமைத்தனா்.

மேலும் எஸ்டேட் சாலையோரம் பகுதிகளில் யானைகளை கண்டால் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து துன்புறுத்தல் செய்யும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.