ரயிலில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை கடத்திய நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தில்லியிலிருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் நோக்கிச் செல்லும் ரயிலில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை ரயில் நிலையத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 18.7.2021-இல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த நபரிடம் போலீஸாா் சோதனையிட்டனா். அவரிடம் 2 கிலோ 235 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை பையில் வைத்து கடத்தியது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபா் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த எக்விம் கிங்ஸ்லி (47) என்பதும், அவா் ஈரோடு மாவட்டத்தில் தங்கி பல ஆண்டுகளாக பல்வேறு வேலைகள் செய்துவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸாா், எக்விம் கிங்ஸ்லியைக் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட எக்விம் கிங்ஸ்லிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சாா்பில் அரசு வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.
தொடர்புடையது

2 வயதுக் குழந்தைக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



