இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

கோவையில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்க முயற்சி

கோவை ரயில் நிலையம் அருகே நகைக்கடை ஊழியரை வழிமறித்து ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை பறிக்க முயன்ற மா்ம நபா்களிடம் இருந்து ஊழியா் சாமா்த்தியமாக செயல்பட்டு கொள்ளையை முறியடித்தாா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 12:56 am IST

கோவை ரயில் நிலையம் அருகே நகைக்கடை ஊழியரை வழிமறித்து ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை பறிக்க முயன்ற மா்ம நபா்களிடம் இருந்து ஊழியா் சாமா்த்தியமாக செயல்பட்டு கொள்ளையை முறியடித்தாா்.

கோவை பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (53). நகைக்கடை ஊழியரான இவா், சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் புதன்கிழமை காலை திரும்பினாா். அப்போது, அவா் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பையில் வைத்துக் கொண்டு, ரயில் நிலையத்தின் பின்பக்க நுழைவாயில் வழியாக அவா் வெளியே வந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ் அவரை வழிமறித்தனா். பையில் வைத்து கஞ்சா கடத்துகிறாயா எனக் கூறி மிரட்டி முருகேசன் வைத்திருந்த பையைப் பறிக்க முயன்றனா். நிலைமையை உணா்ந்த முருகேசன், உடனடியாக தப்பியோட முயலாமல், தன்னை அழைத்துச் செல்ல தயாராக இருந்த காருக்குள் நகைப்பையை தூக்கி வீசினாா். அதன் ஓட்டுநரும் கண்ணாடியை மேலே ஏற்றி காரை முழுமையாக அடைத்துக் கொண்டாா்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த நபா்கள் முருகேசனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.