நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

700 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

கோவையில் 700 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வியாபாரியை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மே 2026, 2:09 am IST

கோவையில் 700 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வியாபாரியை கைது செய்தனா்.

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், வெரைட்டி ஹால் சாலை போலீஸாா், தெலுங்கு வீதி பகுதியில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் விசாரணை மேற்கொண்டனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவரது வாகனத்தை சோதனையிட்டுள்ளனா். அப்போது, அதில் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் கோவை, தெலுங்கு வீதியில் மளிகைக் கடை நடத்தி வரும் பிரகாஷ் (29) என்பதும், கா்நாடக மாநிலம், பெங்கரில் இருந்து புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பிரகாஷைக் கைது செய்த போலீஸாா், அவரது கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 700 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.