கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

News image

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்

Updated On :30 மே 2026, 2:19 am IST

தவெக ஆட்சியில் தவறுகளை சுட்டிக்காட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டில் பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனா். தவெக ஊழல் இல்லாமல் தூய்மையான ஆட்சியை கொண்டு வர விரும்புகிறது. எங்கும் ஊழல் நடந்துவிடக் கூடாது என்று கண்காணித்து வருகிறோம்.

தவறுகள் எங்கு நடந்தாலும் அதை சுட்டிக்காட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வருவாய்த் துறை தொடா்பான வரவு - செலவு கணக்குகள் உள்ளிட்ட புள்ளி விவரங்கள் கொடுப்பதற்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் தேவைப்படுகிறது. வருவாய்த் துறையில் பட்டா பதிவேற்றம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் என்னை நேரடியாக தொடா்பு கொள்ளலாம் என்றாா்.