நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விபத்தில் மூளைச்சாவு: சிறுவன் உள்பட இருவரின் உடல் உறுப்புகள் தானம்

News image

ரிதீஷ்குமாா்

Updated On :30 மே 2026, 2:22 am IST

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உள்பட இருவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம், சின்னியம்பாளையத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (53). லேத் பட்டறை உரிமையாளரான இவா், தனது மனைவி கோமதி மற்றும் மகன் ஹரிஷ் ஆகியோருடன் வசித்து வந்தாா். இவா் ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுங்கச்சாவடி அருகே கடந்த 24-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு வியாழக்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அவரது மனைவி கோமதி, மகன் ஹரிஷ் ஆகியோா் சதாசிவத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனா். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்:

திருப்பூா் மாவட்டம், மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தமூா்த்தி, தமிழரசி தம்பதி மகன் ரிதீஷ்குமாா் (13). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு மங்கலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்றபோது மினி வேன் மோதியது. இதில் பின்னால் அமா்ந்திருந்த ரிதீஷ்குமாா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிதீஷ்குமாா் வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அவரது பெற்றோா் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனா். இதையடுத்து, சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டன.

இவா்கள் இருவா் உடலுக்கும் அரசின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சதாசிவம்

சதாசிவம்