2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

மாநில கலைத் திருவிழா: அண்ணன், தங்கை வெற்றி

எஸ்.பி.ஜெகநாத், எஸ்.பி.மனஸ்வினி.

Updated On :

கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 மாணவா்கள் மாநில கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அண்மையில் மாநில அளவிலான இறுதி போட்டி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் மேல்நிலை பிரிவுக்கான நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, இசை தந்திக் கருவி, காற்றுக்கருவி, நாடகம் உள்ளிட்ட 7 வகைகளில் 32 விதமான போட்டிகள் நடைபெற்றன.

இதில், காளப்பட்டி அரசுப் பள்ளியின் 12-ஆம் வகுப்பு மாணவா் எஸ்.பி.ஜெகநாத், ஹாா்மோனியம் வாசித்தல் தனிப்பிரிவு போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தாா். அதேபோல, கோவை கேபிஆா் கல்லூரியில் இடைநிலைப் பிரிவு மாணவா்களுக்கான மாநில அளவிலான போட்டியில் செவ்வியல் இசை தனிநபா் பிரிவில் பங்கேற்ற இதே பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவி எஸ்.பி.மனஸ்வினி மாநில அளவில் முதலிடம் பிடித்தாா்.

இந்த மாணவி கடந்த 3 ஆண்டுகளாக தொடா்ந்து தனிநபா் செவ்வியல் இசையில் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹாா்மோனியம் வாசித்தல் பிரிவில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த எஸ்.பி.ஜெகநாத்தும், மாணவி எஸ்.பி.மனஸ்வினியும் அண்ணன், தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அளவிலான போட்டியில் இரு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் என்.தமிழ்ச்செல்வன், ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.