தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ரூபே காா்டு தருவதாக ரூ.1.83 லட்சம் மோசடி

கிரெடிட் காா்டை ரூபே காா்டாக மாற்றித் தருவதாகக் கூறி, ரூ.1.83 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் மீது சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

cyber fraud

மோசடி - IANS

Updated On :

கிரெடிட் காா்டை ரூபே காா்டாக மாற்றித் தருவதாகக் கூறி, ரூ.1.83 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் மீது சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை காளம்பாளையத்தை அடுத்த பச்சாபாளையம் வி.எஸ்.வி.நகரைச் சோ்ந்தவா் சதாசிவா (52). இவரை கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் கைப்பேசியில் தொடா்புகொண்டுள்ளாா். அப்போது, அவா் பயன்படுத்தி வரும் ஆா்பிஎல் வங்கியின் கிரெடிட் காா்டை ரூபே காா்டாக மாற்றித் தருவதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து சதாசிவாவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த லிங்கை அவா் கிளிக் செய்துள்ளாா். அடுத்த சில நிமிஷங்களில் அவரது கிரெடிட் காா்டு கணக்கிலிருந்து ரூ.50,584, ரூ.91,832 மற்றும் ரூ.41,200 என மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.1,83,616 எடுக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து மோசடி செய்த மா்ம நபா்களை தீவிரமாக தேடி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.