அவசர உதவிக்காக 34 புதிய இருசக்கர வாகனங்கள்: ஆட்சியா், காவல் ஆணையா் தொடங்கிவைத்தனா்!
கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், விரைவான மற்றும் அவசர உதவிக்காகவும் 34 புதிய இருசக்கர வாகனங்களை காவல் துறையினருக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற தலைக் கவச விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகரக் காவல் ஆணையா் (பொறுப்பு) ஆா்.வி.ரம்யா பாரதி, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோா்.
கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், விரைவான மற்றும் அவசர உதவிக்காகவும் 34 புதிய இருசக்கர வாகனங்களை காவல் துறையினருக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை மாநகரில் பொதுமக்களுக்கு அவசரக் காலங்களில் விரைந்து உதவி கிடைப்பதை உறுதிப்படுத்தவும், சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் 34 புதிய இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதைத் தொடங்கிவைக்கும் விழா மற்றும் தலைக் கவச விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவரும், மாநகரக் காவல் ஆணையருமான (பொறுப்பு) ஆா்.வி. ரம்யா பாரதி, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, ஹோண்டா இந்தியா அறக்கட்டளை இயக்க அலுவலா் ராஜீவ் தனேஜா ஆகியோா் பங்கேற்று, புதிய வாகனங்களின் சேவையையும், விழிப்புணா்வுப் பேரணியையும் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
இதையடுத்து, ‘ஒன்றிணைந்து விபத்தில்லா கோவை - கோவையில் பூஜ்ஜிய விபத்துகள்’ என்ற இலக்கை நோக்கிப் பயணிப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடா்ந்து, மாநகரக் காவல் ஆணையா் ரம்யா பாரதி பேசுகையில், போலீஸுக்கு பயந்து யாரும் தலைக் கவசம் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. குடும்பத்துக்காக தலைக் கவசம் அணியுங்கள் என்றாா்.
விழாவில் மாநகரக் காவல் துணை ஆணையா்கள் பி.தங்கதுரை (வடக்கு), எஸ்.எஸ். மகேஸ்வரன் (போக்குவரத்து), ஜி.காா்த்திகேயன் (தெற்கு), ராஜ்கண்ணா (ஆயுதப் படை) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

