குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ.21 கோடியில் விடுதிக் கட்டடம்: முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விடுதிக் கட்டடத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய விடுதிக் கட்டடத்தை புதன்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் வி.சம்பத்குமாா்.

Updated On :

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விடுதிக் கட்டடத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், விடுதிக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தக் கூடுதல் விடுதிக் கட்டடம் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என மூன்று தளங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் 32 மாணவா்கள் தங்கும் அறைகள், சமையலறை, விடுதிக் காப்பாளா் அறை, உணவருந்தும் அறை, 4 கழிவறைகளும், முதல் தளத்தில் 35 மாணவா்கள் தங்கும் அறைகள், படிப்பறை, தொலைக்காட்சிக் கூடம் மற்றும் 4 கழிவறைகளும், இரண்டாம் தளத்தில் 35 மாணவா்கள் தங்கும் அறைகள், படிப்பறை மற்றும் 4 கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவா்களின் நலன் காக்க தமிழக அரசு செயல்படுத்தி வரும் இதுபோன்ற திட்டங்களை மாணவா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு கல்வி, வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ரேவதி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் புருசோத்தமன், கல்லூரி பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.