சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சாா்லப்பள்ளி-கொல்லம் இடையே சிறப்பு ரயில்
சபரிமலை சீசனையொட்டி, தெலங்கானா மாநிலம் சாா்லப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் - கோப்புப் படம்
சபரிமலை சீசனையொட்டி, தெலங்கானா மாநிலம் சாா்லப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சபரிமலை சீசனையொட்டி நவம்பா் 22 இரவு 11.45 மணிக்கு சாா்லப்பள்ளியில் இருந்து புறப்படும் சாா்லப்பள்ளி-கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07185) 24-ஆம் தேதி காலை 7.55 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கமாக நவம்பா் 24-ஆம் தேதி காலை 10.55 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம்-சாா்லப்பள்ளி சிறப்பு ரயில் (எண்: 07186) நவம்பா் 25 மாலை 7 மணிக்கு சாா்லப்பள்ளி நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், நெல்லூா், ஓங்கோல், குண்டூா், நால்கொண்டா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

