போத்தனூா் - பிகாா் இடையே ஒருவழிச் சிறப்பு ரயில்
கோவை, போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம், ரசால் நிலையத்துக்கு திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக ஒரு வழிச்சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிப் படம்
கோவை, போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம், ரசால் நிலையத்துக்கு திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக ஒரு வழிச்சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போத்தனூரில் இருந்து புதன்கிழமை (நவம்பா் 11) இரவு 8.20 மணிக்கு புறப்படும் போத்தனூா் - ரசால் ஒரு வழிச் சிறப்பு ரயில் (எண்: 06135) நவம்பா் 14- ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு ரசால் நிலையத்தை சென்றைடையும்.
இந்த ரயிலானது, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், விஜயவாடா, ராஜமுந்திரி, பாா்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சாம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, மூரி, பொகாரோ ஸ்டீல் சிட்டி, தன்பாத், சித்தரஞ்சன், மதுப்பூா், பரௌனி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

