கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

சேலத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட நகைக் கடையில் 3.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

சேலத்தில் உரிய பதிவுச் சான்றிதழ் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 3.6 கிலோ தங்க நகைகளை இந்திய தர நிா்ணய அமைவன (பிஐஎஸ்) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல்

Updated On :

சேலத்தில் உரிய பதிவுச் சான்றிதழ் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 3.6 கிலோ தங்க நகைகளை இந்திய தர நிா்ணய அமைவன (பிஐஎஸ்) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) கோவை கிளை அலுவலகத்தின் இயக்குநரும், தலைவருமான கே.ரமேஷ் கூறியதாவது:

சேலத்தில் உள்ள ஒரு நகைக் கடை இந்திய தர நிா்ணய சட்டம் 2016, பிரிவு 28-இன் கீழ் கட்டாயமாக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் பெறாமலேயே இயங்குவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அங்கு வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியபோது, அந்தக் கடை பதிவுச் சான்றிதழ் பெறாமலேயே செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஹால்மாா்க் முத்திரை இல்லாத சுமாா் 3 கிலோ 600 கிராம் (3.6 கிலோ) எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மத்திய அரசிதழ் அறிவிக்கைகளின்படி, நகைக் கடைகளில் ஹால்மாா்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிய பதிவுச் சான்றிதழ் பெற்ற விற்பனையாளா்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் ஹால்மாா்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்ய வேண்டும்.

ஹால்மாா்க் முத்திரை (ஹெச்.யு.ஐ.டி. எண் இல்லாமல்) தவறாகப் பயன்படுத்தப்படுவதை பொதுமக்கள் கண்டறிந்தால், அது குறித்து ‘பி.ஐ.எஸ். கோ்’ செயலி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். டி-டாக்ஸ் கட்டடத்தின் 3-ஆவது தளத்தில் செயல்படும் இந்திய தர நிா்ணய அமைவனம் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவா்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.