காப்பா் கம்பிகள் திருட்டு: ஊழியா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
கோவை டைடல் பூங்காவில் ரூ.4 லட்சம் மதிப்பிலான காப்பா் கம்பிகளைத் திருடியதாக ஊழியா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, பீளமேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டைடல் பூங்காவில் கட்டட மேலாண்மைத் துறையில் தொடா்ந்து காப்பா் கம்பிகள் திருடப்பட்டதாம். விசாரணையில், அங்கு ஊழியராகப் பணியாற்றும் அருப்புக்கோட்டை பகுதியைச் சோ்ந்த சரவணன் (25) என்பவா் கம்பிகளைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பீளமேடு காவல் நிலையத்தில் டைடல் பூங்கா கட்டட மேலாண்மைத் துறை மேலாளா் மணிகண்டன் (43) புகாா் அளித்தாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், கம்பிகளைத் திருடியதை சரவணன் ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான கம்பிகளைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

