நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!நிலவு தோன்றி மறையும் அழகிய விடியோ பகிர்ந்தார் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி!!வந்தே பாரத் ரயில்களில் விமானங்களில் வழங்குவது போன்ற உணவு அறிமுகம்! வாவ் சொல்ல வைக்குமா?ஜென்சன் ஹுவாங் சிக்கல் ஓய்ந்தது! என்விடியா மற்றொரு நிர்வாகி - சீன ஊழியருக்கு உறவு?எப்படி சும்மா இருக்க முடியும்? கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் கேள்வி!அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!

பெண் அதிகாரி புகார்: திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு!

பெண் அரசு அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது குறித்து...

vasantham karthikeyan

வசந்தம் கார்த்திகேயன் - எக்ஸ் (video grab)

Updated On :

கள்ளக்குறிச்சியில் பெண் அரசு அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது காவல் துறையினர் இன்று (நவ. 26) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் மேலாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் குறித்து புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில் தன்னை சாதி பார்த்து பணிபுரிவதாக இழிவான முறையில் வசந்தம் கார்த்திகேயன் தொலைபேசியில் பேசியதாகவும், பணியில் நீடிப்பது குறித்து மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அநாகரிகமாக மெசேஜ் செய்தது மட்டுமின்றி அவதூறு பரப்பியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் தியாகதுருகம் காவல் துறையினர் வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது திமுக எம்.எல்.ஏ. மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Complaint by female official: Case filed against DMK MLA Vasantham Karthikeyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.