சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்வு; 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு!

துரைமுருகன் உள்பட 24 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருப்பது பற்றி....

DVAC Files Case Against Former DMK Minister Durai Murugan and 23 Others

துரைமுருகன்.

Updated On :

திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் உள்பட 24 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் தமிழ்செல்வன் மற்றும் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் ஆகியோர்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் தலைமையகக் குற்ற எண்.08/2026 ன் படி முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், .ஏ.முத்தையா, முதன்மை தலைமை பொறியாளர் (ஓய்வு), ராமமூர்த்தி, முதன்மை தலைமை பொறியாளர் (ஓய்வு) மற்றும் நீர்வளத் துறையைச் சேர்ந்த 14 அரசு ஊழியர்கள், 10 தனியார் நபர்கள்/ நிறுவனங்கள் மற்றும் பல நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2021 முதல் 2024 வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள 28 குவாரிகளில் ஆற்று மணல் எடுக்கும் பணிகளில் ஊழலும் முறைகேடுகளும் நடைபெற்றுள்ளதாகவும், பணிகளில் வெளிப்படையான டெண்டர் முறைக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட டெண்டர் மூலம் ஒப்பந்தங்களை வழங்கி, கனிம திட்டத்தின் வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டு, மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் கூடுதலாக சட்ட விரோதமாக ஆற்று மணல் எடுத்தும், அனுமதிச் சீட்டு என்ற பெயரில் பற்றுச் சீட்டுகளை போலியாக தயாரித்து அவற்றை உண்மையானவை போல பயன்படுத்தி, மொத்தம் உள்ள 28 குவாரிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட 4 குவாரிகளில் ஆற்று மணலை கொள்ளையடித்து, அதன்மூலம் அரசுக்கு ரூ.1427,34,23,059/- வருவாய் இழப்பினை ஏற்படுத்தியதாக புகார்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, இன்று சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வேலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 34 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய 825 குற்றத்தை நிரூபிக்கும் ஆவணங்களும், 11 மின்னணு சாதனங்களும் மற்றும் 3 வங்கி லாக்கர் சாவிகள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) has registered a case against senior DMK leader and former minister Durai Murugan, along with 23 others.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.