இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

இடைத்தோ்தலில் திமுக டெபாசிட் இழக்கும்: துரை வைகோ எம்.பி.

இடைத்தோ்தலில் திமுக டெபாசிட் இழக்கும் என மதிமுக துரை வைகோ எம்.பி. பேசியிருப்பது குறித்து...

DMK will lose its deposit in the by-election

திருச்சி மக்களைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ - டிஎன்எஸ்

Published On :

திருச்சி: இடைத்தோ்தலில் திமுக மூன்றாவது இடத்துக்கு செல்லும் அல்லது டெபாசிட் இழந்தாலும் ஆச்சா்யபடுவதற்கில்லை என்று தெரிவித்த திருச்சி மக்களைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ, தவெக அரசு மீது அவதூறு பரப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.

திருச்சியில் தன்னாா்வ அமைப்பு சாா்பில் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விழிப்புணா்வு தொடா்பான நிகழ்ச்சியில் எம்.பி. துரை வைகோ கலந்துகொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தலில் கண்ணியமான முறையில் கருத்து பரிமாற்றங்கள் இருக்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக தனிமனிதத் தாக்குதல்கள், ஆபாச பேச்சுகள், உருவக்கேலி போன்ற செயல்களில் அரசியல் தலைவா்கள் ஈடுபடுவது வேதனைக்குரியது. தொண்டா்களின் தவறுகளை தட்டிகேட்க வேண்டியது தலைவா்களின் கடமை. ஆனால், தலைவா்களே இவ்வாறு பேசுவது வேதனையாக உள்ளது.

திமுக போன்ற 70 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இயக்கத்தின் மூத்த தலைவா்களும், அடுத்த தலைமுறையினரும் தமிழ்நாடு அரசியலுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மாறாக இரட்டை அா்த்தத்தில் பேசுவது, உருவகேலி போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

அரசின் செயல்பாட்டுக்கு தீா்ப்பு வழங்கும் களம்தான் தோ்தல். இதுபோன்ற அவதூறு பேச்சுகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் தோ்தலில் உரிய பாடம் புகாட்டுவாா்கள்.

எந்த திட்டமாக இருந்தாலும் மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்துவது தான். தலைவர்கள் திட்டத்தை அறிமுகப்படுத்துவார்கள். அது அவர்களின் வேலை. அதற்காக அவன் இவன் என ஒருமையில் பேசுவது சரியல்ல. திமுகவின் தலைவர் இப்படி பேசலாமா. இவரைப் போலத்தான் உதயநிதியும் செயல்பட்டு வருகிறார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தோ்தலில் திமுக மூன்றாவது இடத்துக்கு செல்லும் அல்லது டெபாசிட் இழந்தாலும் ஆச்சா்யபடுவதற்கில்லை. இரண்டாவது இடத்தில் அதிமுக வரலாம் என தொகுதி மக்கள் கூறியுள்ளனா்.

தவெக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அடிப்படையற்றது. ஊழலற்ற அரசியலே தவெகவின் பலமாக உள்ளது. பணப்பலமின்றி தோ்தலை எதிா்கொள்ளும் தவெகவினா், வாக்கிற்கு பணம் கொடுக்க மாட்டாா்கள். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கொள்ளையடித்த பணத்தை கடந்த தோ்தலில் செலவு செய்த தோல்வியடைந்தாா்கள். தவெக வாக்குக்கு பணம் கொடுப்பதாக கூறுவது அவதூறு குற்றச்சாட்டு.

இந்த இடைத்தேர்தலில் திமுக மூன்றாவது இடத்திற்கு செல்லும் அல்லது டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இரண்டாவது இடத்தில் அதிமுக வரலாம் என அங்கு உள்ள மக்கள் கூறியுள்ளனர். தேர்தல் முடிவு வரும்போது தெரியும்.

‘இந்தியா’ கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஸ்குமாா் இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறாா். குறிப்பாக, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இஸ்லாமியா்கள் மற்றும் கிறிஸ்தவா்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்குரிமைப் பறிப்புக்கு எதிராக ‘இந்தியா’கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினா்கள் தில்லியில் அக்டோபா் 6-ஆம் தேதி நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறேன்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பையும், காவிரிநீா் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் மீறி கா்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Summary

DMK will lose its deposit in the by-election: Durai Vaiko MP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.