நிலவு தோன்றி மறையும் அழகிய விடியோ பகிர்ந்தார் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி!!வந்தே பாரத் ரயில்களில் விமானங்களில் வழங்குவது போன்ற உணவு அறிமுகம்! வாவ் சொல்ல வைக்குமா?ஜென்சன் ஹுவாங் சிக்கல் ஓய்ந்தது! என்விடியா மற்றொரு நிர்வாகி - சீன ஊழியருக்கு உறவு?எப்படி சும்மா இருக்க முடியும்? கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் கேள்வி!அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!

பெண்கள் பாதுகாப்பு! வாயே திறக்காத முதல்வர் விஜய்: மேயர் பிரியா

தவெகவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சென்னை மேயர் பிரியா கூறியது குறித்து...

CM Vijay | Mayor Priya

முதல்வர் விஜய் | மேயர் பிரியா - கோப்புப் படம்

Updated On :

செயற்கை நுண்ணறிவு மூலம் தன்னைத் தவறாகச் சித்திரித்து இணையத்தில் பரப்பும் தவெகவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னை மேயர் பிரியா தெரிவித்திருப்பதாவது, "ஒரு காணொலியில் ஏஐ மூலம் என்னை வக்கிரமாகச் சித்திரித்து தவெகவினர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக் குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் 'தானே' பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதல்வர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.

அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.

இந்த தனிநபர் மீதான தாக்குதலைச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Legal action against TVK Vulgar Warriors for circulating AI-generated, misrepresented content online, says Chennai Mayor Priya

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.