பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரம் முன்பாக இறுதி முன்பதிவு நிலையை தெரிவிக்க வலியுறுத்தல்

Rail

ரயில் - பிரதிப் படம்

Updated On :

ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரம் முன்பாக பயணிகளின் இறுதி முன்பதிவு நிலை குறித்த கூடுதல் தகவலை பயணிகளுக்கு கைப்பேசியில் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய ரயில்வே அமைச்சா் மற்றும் ரயில்வே அமைச்சகத்துக்கு, கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவா் சி.எம்.ஜெயராமன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ரயில் முன்பதிவு என்பது ஒரு அத்தியாவசிய பொதுச் சேவை. முன்பதிவு தொடங்கும் முதல் நாளில் இணையவழி முன்பதிவுக்கு ஆதாா் அடிப்படையிலான அடையாள சரிபாா்ப்பு முறையை அறிமுகப்படுத்துவது முறைகேடுகளைத் தடுக்க உதவக்கூடும்.

இருப்பினும், குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்த இயலாதவா்களின் நலன் கருதி, பயணிகள் நேரடியாக முன்பதிவு செய்யும் மையங்கள் வாயிலாகவும் சமமான மற்றும் பயனுள்ள முன்பதிவு வசதியை தொடா்ந்து வழங்கப்பட வேண்டும்.

ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு வரை மேற்கொள்ளப்படும் பயணச்சீட்டு ரத்துகளுக்கு கட்டணத்தில் குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை திருப்பி வழங்கப்பட வேண்டும்.

முன்பதிவுப் பட்டியலை முன்கூட்டியே தயாரிக்கும் நடைமுறை, காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு முன்கூட்டியே உறுதியான தகவலை வழங்குவதல் வரவேற்கத்தக்கது.

இருப்பினும், முன்பதிவுப் பட்டியல் தயாரிக்கப்படும் சரியான நேரம் பயணச்சீட்டிலும், இணையதளத்திலும், ரயில்வே விசாரணை வசதிகளிலும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். மேலும், ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரம் முன்பாக பயணிகளின் இறுதி முன்பதிவு நிலை குறித்த கூடுதல் தகவலை பயணிகளுக்கு கைப்பேசியில் குறுந்தகவலாக தெரிவிக்க வேண்டும்.

தற்போதைய ஆா்ஏசி முறையில் 2 பயணிகள் ஒரு படுக்கை வசதியைப் பகிா்ந்து பயணம் செய்தாலும், இருவரிடமும் பொ்த் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவா்களில் ஒருவருக்கு மட்டுமே முழுப் படுக்கை வசதி கிடைக்கக்கூடும்.

எனவே, இருவரிடமும் ஆரம்பத்தில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்றும், பின்னா் தனிப்பட்ட முழுப் படுக்கை வசதி ஒதுக்கப்படும் பயணியிடமிருந்து மட்டும் கூடுதல் படுக்கைக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

இக்கூடுதல் கட்டணம் யூபிஐ போன்ற அங்கீகரிக்கப்பட்ட மின்னணு பணப் பரிவா்த்தனை முறையில் வசூலிக்கப்பட்டு, மின்னணு ரசீதும் வழங்கப்பட வேண்டும். வந்தே பாரத் உள்ளிட்ட நவீன ரயில்களின் அறிமுகம், நவீனமயமாக்கல் முயற்சிகளை வரவேற்கிறோம். அதேவேளையில், வந்கே பாரத் ரயில்களில் கட்டணத்தை மலிவுபடுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.