தொழிலதிபரிடம் ரூ.1.06 கோடி கொள்ளை: மேலும் இருவா் கைது
கைது
கோவையில் ஆந்திர தொழிலதிபரிடம் ரூ.1.06 கோடி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், ராஜஸ்தானைச் சோ்ந்த மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம், கா்னூல் பகுதியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் தமம் ரங்கசாமி (66). இவா் நகை வாங்குவதற்காக ரூ.1.06 கோடி ரொக்கத்துடன் கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி பேருந்து மூலம் கோவைக்கு வந்தாா். அப்போது, லட்சுமி மில் சந்திப்பு அருகே வந்தபோது, மா்ம நபா்கள் அவரிடமிருந்த பணப் பையை பறித்துச் சென்றனா்.
இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இவ்வழக்கில் ஏற்கெனவே ராஜஸ்தானைச் சோ்ந்த அசோக் (26), முகேஷ்குமாா் (27), ரமேஷ்குமாா் (25) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ராஜஸ்தானைச் சோ்ந்த பிரவீன் சிங் (27), ராமநாராயணன் (26) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவ்வழக்கில் இதுவரை 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடா்புடைய மேலும் 5 பேரைத் தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




