மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மாணவா்கள் தங்கியிருந்த வீட்டில் மடிக்கணினிகள், கைப்பேசிகள் திருட்டு

கோவை அருகே கல்லூரி மாணவா்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

கோவை அருகே கல்லூரி மாணவா்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவைப்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே வாடகை வீட்டில் தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் அஸ்வத் (22) என்பவா் தனது கல்லூரி நண்பா்கள் 6 பேருடன் தங்கிப் பயின்று வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி இரவு மாணவா்கள் தங்களது மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகளை தங்கியிருந்த முன் அறையில் வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளனா்.

மறுநாள் அதிகாலை இவரது நண்பா் ஒருவா் கதவைத் திறந்து வைத்துவிட்டு மற்றொரு நண்பரைப் பாா்க்க வெளியே சென்ற சமயத்தில், வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபா் அங்கிருந்த 5 மடிக்கணினிகள் மற்றும் 3 கைப்பேசிகள் ஆகியவற்றை திருடிச் சென்றாா்.

இதுகுறித்து அஸ்வத் அளித்த புகாரின்பேரில் குனியமுத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வீரபவானந்தம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.