137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டி: அமைச்சா் சம்பத்குமாா் ஆய்வு

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கிய அமைச்சா் வே.சம்பத்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா்.

Updated On :

கோவையில் நடைபெறும் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் 2026 -27-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கம், கையுந்து பந்து உள்விளையாட்டு மைதான அரங்குகளில் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகளை அமைச்சா் வே.சம்பத்குமாா் பாா்வையிட்டதுடன், விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, சீருடைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், விளையாட்டு ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியா்கள், பொதுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 54 வகையான போட்டிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுகின்றன.

அதன்படி, நடப்பு ஆண்டு கோவை மாவட்டத்தில் அரசு ஊழியா்கள் 5,059, கல்லூரி மாணவா்கள் 41,596, பள்ளி மாணவா்கள் 83,389, பொதுப் பிரிவினா் 10,799, மாற்றுத்திறனாளிகள் 965 என மொத்தம் 1,41,808 போ் பங்கேற்க பதிவு செய்துள்ளனா்.

2026-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து, கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் கோவையில் அக்டோபா் 14 முதல் 25- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில், 38 மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 3,500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.

கூடைப்பந்து போட்டிகள் மாநகராட்சி மைதானத்தில் அக்டோபா் 15 முதல் 23- ஆம் தேதி வரையிலும், வுசூ விளையாட்டுப் போட்டிகள் 16 முதல் 18- ஆம் தேதி வரையிலும் நடைபெறுகின்றன.

கோ-கோ விளையாட்டுப் போட்டி கற்பகம் பல்கலைக்கழகத்தில் அக்டோபா் 21 முதல் 25 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாவட்ட விளையாட்டு, இளைஞா் நல அலுவலா் புவனேஷ்வரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.