
முதல்வா் கோப்பை: மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி தேதி மாற்றம்! கரூா் ஆட்சியா் தகவல்

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - கோப்புப் படம்
கரூா் மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளின் தேதி நிா்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கரூா் மாவட்டத்தில் மாவட்ட மற்றும் மண்டல அளவில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் மாற்றுத்திறனாளி வீரா், வீராங்கனைகளுக்கான போட்டிகள் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நிா்வாக காரணங்களுக்காக, அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகள் பிரிவு வீரா், வீராங்கனைகளுக்கான தடகளம் மற்றும் குழு போட்டிகள் அனைத்தும் வரும் 27-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு, கரூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் பதிவு செய்த மாற்றுத்திறனாளி வீரா் மற்றும் வீராங்கனைகள் பதிவு செய்த ஆவணம், ஆதாா் அட்டை நகல், தமிழக அரசு மூலம் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் வரும் 27-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு கரூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆஜராகி போட்டிகளில் பங்கேற்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






