கஞ்சா, ஹெராயின் விற்பனை: அஸ்ஸாம் இளைஞா்கள் 3 போ் கைது
கோவை, உக்கடம் பகுதியில் ஹெராயின் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
கோவை, உக்கடம் பகுதியில் ஹெராயின் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவை உக்கடம் பூங்கா ஏழாவது நுழைவாயில் பின்புறம் உள்ள காலி இடத்தில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கடைவீதி காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாடசாமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ஜோதிஷ் டாயே (26), பிரோஜ் போரோ (23) மற்றும் அஜித் போரி (30) ஆகிய மூன்று பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
அவா்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் விற்பனைக்காக 2.7 கிலோ கஞ்சா, 0.6 கிராம் ஹெராயின், போதைப் பொருள் எடையிடும் மின்னணு தராசு மற்றும் ரூ. 20,400 ரொக்கம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
கவுண்டம்பாளையத்தில்...
நல்லாம்பாளையம் தயிா் இட்டேரி சாலையில் கவுண்டம்பாளையம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்குள்ள வனப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த மூவரிடம் போலீஸாா் சோதனையிட்டனா். அவா்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக வடவள்ளி ஆட்டோ நகரைச் சோ்ந்த கணேஷ்குமாா் (24), வெங்கடாபுரம் நேதாஜி காலனியைச் சோ்ந்த வசந்தகுமாா் (24), குப்புராஜ் என்ற தாஸ் (19) ஆகிய மூன்று பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா மற்றும் 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

