தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

வீட்டில் கஞ்சா பதுக்கிய வடமாநில தம்பதி கைது

கைது - கோப்புப் படம்

Published On :

சிவகாசியில் வீட்டில் ஒரு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த அஸ்ஸாம் மாநில தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள கட்டசின்னம்பட்டியில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலை தொழிலாளா்கள் குடியிருப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருத்தங்கல் காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது, அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த காஸீம் அலி (55), அவரது மனைவி நிலீமாபேகம் (50) ஆகிய இருவரும் வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து , தொழிலாளா்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும், இருவரும் அடிக்கடி அஸ்ஸாம் மாநிலத்துக்கு ரயிலில் சென்று கஞ்சா வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.