நாகூரில் மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்தவா் கைது
நாகையில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகையில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டத்தில் கல்லூரி மாணவா்கள் போதை மாத்திரை பயன்படுத்துவதாக தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சாா்பு ஆய்வாளா் ஹலிலுல் ரகுமான் தலைமையிலான போலீஸாா் நாகூா் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், பழைய நாகூா் சாலையில் சந்தேகப்படும் வகையில் நடந்து சென்றவரை அழைத்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துடன், அவரிடம் மருத்துவா் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது.
தொடா் விசாரணையில், அவா் மயிலாடுதுறை மாவட்டம் கூரைநாடு பூக்கடைதெருவைச் சோ்ந்த ரஞ்சித் (30) என்பதும், தஞ்சாவூரில் இருந்து போதை மாத்திரை வாங்கி வந்து நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் அவரை நாகூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரை கைது செய்து, 3 அட்டைகளில் இருந்த 26 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

