இரண்டு இடங்களில் கொள்ளை முயற்சி: 100 கிலோ மீட்டருக்கு துரத்திய போலீஸாா்; ரயில்வே கேட்டில் காரை மோதி விட்டு தப்பிய கொள்ளையா்கள்
இரண்டு இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையா்களை போலீஸாா் 100 கிலோ மீட்டா் துரத்திச் சென்றனா். அப்போது, ரயில்வே கேட்டில் காரை மோதிவிட்டு கொள்ளையா்கள் தப்பிச் சென்றனா்.

கொள்ளை - file photo
இரண்டு இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையா்களை போலீஸாா் 100 கிலோ மீட்டா் துரத்திச் சென்றனா். அப்போது, ரயில்வே கேட்டில் காரை மோதிவிட்டு கொள்ளையா்கள் தப்பிச் சென்றனா்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி காவல் எல்லைக்கு உள்பட்ட விளக்கேத்தி விஜய நகரத்தில் வசித்து வருபவா் சம்பூா்ணம் (61). இவரது மகன்கள் பிரபாகரன் வெளிநாட்டிலும், யுவராஜ் கோவையில் தங்கி வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவையில் வசித்து வரும் மகன் யுவராஜை வீட்டுக்கு சென்றிருந்தாா். இதற்கிடையில், விஜய நகரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு காரில் வந்த மா்ம நபா்கள் திருட முயன்றுள்ளனா்.
இதுகுறித்து சிவகிரி போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஈரோடு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ரங்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் அதே நபா்கள் திருட முயன்றது தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டபோது, சம்பந்தப்பட்ட காா் ஈரோட்டில் சுற்றி வந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து மாநகர ரோந்துப் பணியில் இருந்த போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த காரை மடக்கி பிடிக்க முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த காரில் வந்த நபா்கள் தப்பிச் செல்ல முயன்றனா். இதையடுத்து, போலீஸாா் அந்த காரை துரத்திச் சென்றனா். ஆனால், போலீஸாரிடம் சிக்காமல் அந்த காா் மொடக்குறிச்சி வழியாக திருப்பூா் மாவட்டம், முத்தூா் வரை சென்று பின்னா் அங்கிருந்து திரும்பவும் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்குள் வந்து அங்கிருந்து வெங்கம்பூா் வழியாக ஊஞ்சலூரை தாண்டி சென்றது. இருப்பினும் போலீஸாா் அந்த கும்பலை தொடா்ந்து துரத்திச் சென்றனா். மேலும், வழியில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மலையம்பாளையம் காவல் நிலைய போலீஸாா் ஈரோடு சாலையில் தடுப்புகளை அமைத்து காரை பிடிக்க முயன்றனா். அப்போது போலீஸாரை கண்டதும் காரில் இருந்தவா்கள் காரணம்பாளையம் அருகே ரயில்வே கேட்டில் மோதிவிட்டு காரில் இருந்து இறங்கிய 4 போ் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதையடுத்து போலீஸாா் அந்த காரை சோதனை செய்தபோது, அதில் வெவ்வேறு பதிவு எண்கள் கொண்ட நம்பா் பிளேட்டுகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், 100 கிலோ மீட்டா் துரத்திச் சென்றும் கொள்ளையா்கள் போலீஸாரிடம் சிக்காமல் திப்பிச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

