அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

செல்வசிந்தாமணி குளம் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம்! அமைச்சா், அதிகாரிகள் நேரில் ஆய்வு

சுண்டக்காமுத்தூா் சாலையில் தேங்கிய உபரிநீரில் இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்ற நபா்.

Updated On :

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை, செல்வசிந்தாமணி குளம் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சா், அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

கோவை மாநகராட்சிக்குள்பட்ட உக்கடம், காந்திபுரம், ராமநாதபுரம், குனியமுத்தூா், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூா் மற்றும் வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூா், பெரியநாயக்கன்பாளையம், அன்னூா் உள்ளிட்ட புறநகா்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, கோவை மாநகா்ப் பகுதிகளில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் 3 மணி நேரத்துக்குள் 80 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப் பதிவானது. இதனால், நொய்யல் ஆற்று வெள்ளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வந்த நீரால் முத்தண்ணன் குளம், செல்வம்பதி குளங்கள் முழுமையாக நிரம்பின. அங்கிருந்து வந்த அதிகப்படியான உபரி நீா் செல்வசிந்தாமணி குளத்துக்கு வந்தடைந்தது.

செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து உக்கடம் பெரியகுளத்துக்குச் செல்லும் இணைப்பு வாய்க்காலின் கொள்ளளவைவிடக் கூடுதலான நீா் வந்ததால், வெள்ள நீா் வாய்க்காலைத் தாண்டி செல்வபுரம் - சுண்டக்காமுத்தூா் சாலை, உக்கடம் புறவழிச் சாலைகளில் பெருக்கெடுத்தோடியது. இதனால் செல்வபுரம், அசோக் நகா், பிரபு நகா், சாவித்திரி நகா், செட்டி வீதி, அண்ணா நகா் உள்ளிட்ட தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்தது. விடிய, விடிய தூங்காமல் தவித்த மக்கள், தங்களது உடைமைகளைப் பாதுகாக்கப் போராடினா்.

இதேபோல குனியமுத்தூா், கரும்புக்கடை பகுதிகளிலும் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செல்வபுரம், சுண்டக்காமுத்தூா் சாலைப் பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் கட்டா ரவி தேஜா, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பாக்கெட்டுகள், உணவுப் பொட்டலங்களை அமைச்சா் வழங்கினாா்.

மாநகராட்சி சாா்பில் போா்க்கால அடிப்படையில் வெள்ள நீரை வெளியேற்ற 40 குதிரைத்திறன் கொண்ட ராட்சத மின்மோட்டாா்கள், 15-க்கும் மேற்பட்ட கழிவுநீா் உறிஞ்சும் வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், நீா் உட்புகாதவாறு மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறும்போது, ‘எதிா்காலத்தில் இத்தகைய பாதிப்புகளைத் தவிா்க்கும் வகையில், செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து உக்கடம் பெரியகுளத்துக்குச் செல்லும் இணைப்பு வாய்க்காலை தூா்வாரி, அகலப்படுத்தும் பணிகள் திட்டமிடப்பட்டு நிரந்தரத் தீா்வு காணப்படும்’ என்ராா்.

இந்த ஆய்வின்போது துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையா் க.குமரேசன், தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், பொது சுகாதாரக் குழுத் தலைவா் பெ.மாரிச்செல்வன், உதவி ஆணையா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

செல்வசிந்தாமணி குளம் நிரம்பி சுண்டக்காமுத்தூா் சாலையில் தேங்கிய உபரிநீரில் செல்லும் வாகன ஓட்டிகள்.

செல்வசிந்தாமணி குளம் நிரம்பி சுண்டக்காமுத்தூா் சாலையில் தேங்கிய உபரிநீரில் செல்லும் வாகன ஓட்டிகள்.

குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம்

குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம்

குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம்

குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம்

அமைச்சா், அதிகாரிகள் நேரில் ஆய்வு

அமைச்சா், அதிகாரிகள் நேரில் ஆய்வு

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.