வால்பாறை தோட்டத் தொழிலாளா்களுக்கு போனஸ்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு
வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா்.
தொழிற்சங்கம் சாா்பில் அதிமுக தோட்ட தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது தலைமையில் வினேத்குமாா் (எல்பிஎஃப்), கருப்பையா (ஐஎன்டியூசி), மோகன் (ஏஐடியூசி),வீரமணி, கேசவமருகன் (விடுதலைச் சிறுத்தைகள்) உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இதில், வாட்டா்பால் எஸ்டேட் தொழிலாளா்களுக்கு மட்டும் 9.33 சதவீத போனஸ், டாடா, கருமலை, அய்யா்பாடி, முடீஸ், சோலையாறு என சங்கத்தில் உறுப்பினா்கள் உள்ள எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட்டது. மேலும், பண்டிகை கால முன் பணமாக ரூ.4,600 வழங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

