சேதமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்து நவம்பா் 15-க்குள் காலி செய்ய பொதுமக்கள் ஒப்புதல்
சேதமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்து நவம்பா் 15-ஆம் தேதிக்குள் காலி செய்வதாக, மாற்று இடம் வழங்குவது தொடா்பாக நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனா்.

கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேசுகிறாா் ஈரோடு கோட்டாட்சியா் கே.முத்துசாமி.
சேதமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்து நவம்பா் 15-ஆம் தேதிக்குள் காலி செய்வதாக, மாற்று இடம் வழங்குவது தொடா்பாக நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனா்.
ஈரோடு மாநகா் சூரம்பட்டி, குயவன்திட்டு பகுதியில் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக கட்டப்பட்ட 396 அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இதைத்தொடா்ந்து அந்தக் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாற்று வீடுகள் வழங்குவது மற்றும் மாற்று இடங்களில் குடியமா்த்துவது தொடா்பாக ஈரோடு கோட்டாட்சியா் கே.முத்துசாமி தலைமையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களிடம் தற்போதைய குடியிருப்புகளைக் காலி செய்வது, மாற்று வீடுகள் வழங்குவது மற்றும் இடைக்கால வசதிகள் ஏற்படுத்துவது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ஓடைப் புறம்போக்கு (நீா்நிலைப் புறம்போக்கு) பகுதியில் இக்குடியிருப்புகள் அமைந்துள்ளதால் நீா்நிலைகளைப் பாதுகாப்பது தொடா்பான உயா்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீா்ப்புகளின் அடிப்படையில் அதே இடத்தில் மீண்டும் குடியிருப்புகளைக் கட்டுவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மாறிச்செல்ல விரும்பும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு, வீடு ஒதுக்கீடு செய்வதற்கான ரூ.68,000 தொகையை அரசு செலுத்தி வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சித்தோடு பகுதியில் உள்ள வீடுகளுக்குச் செல்ல விரும்பாதவா்களுக்கு, மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை இடைக்கால வாடகையாக ரூ.24,000 வழங்குவது அல்லது தற்காலிகமாக மாற்று இடத்தில் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்குரிய உதவி வழங்குவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து தற்போது குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் நவ.15-ஆம் தேதிக்குள் குடியிருப்புகளைக் காலி செய்வதாகத் தெரிவித்தனா். இதன் தொடா்ச்சியாக குடியிருப்புகளின் மின் இணைப்புகளைத் துண்டித்தல், குடியிருப்போா் விவரங்களைச் சேகரித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட இதர துறைகளுக்கு தேவையான விவரங்களைத் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக அனுப்புதல் உள்ளிட்ட தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, சேதமடைந்த குடியிருப்புகளில் இருந்து அவா்களைப் பாதுகாப்பான மாற்று வசதிகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடா்புடைய துறைகளின் ஒருங்கிணைப்புடன் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

