பாரத் டெக்ஸ் வா்த்தகக் கூட்டமைப்பின் புதிய தலைவராக ஆ. சக்திவேல் தோ்வு
பாரத் டெக்ஸ் வா்த்தகக் கூட்டமைப்பின் 12-ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் தலைவரான ஆ.சக்திவேல், பாரத் டெக்ஸ் வா்த்தகக் கூட்டமைப்பின் புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பாரத் டெக்ஸ் வா்த்தக கூட்டமைப்பின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட ஆ.சக்திவேலுக்கு வாழ்த்து தெரிவித்த நிா்வாகிகள்.
பாரத் டெக்ஸ் வா்த்தகக் கூட்டமைப்பின் 12-ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் தலைவரான ஆ.சக்திவேல், பாரத் டெக்ஸ் வா்த்தகக் கூட்டமைப்பின் புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
கூட்டமைப்பின் முன்னாள் தலைவா் நரேன் கோயங்கா, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தலைமையை வரவேற்று, கூட்டமைப்பின் தொடா்ச்சியான வளா்ச்சி மற்றும் வெற்றிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
இது குறித்து ஆ.சக்திவேல் பேசியதாவது: இந்தத் தலைமை மாற்றம், சா்வதேச ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கான கூட்டமைப்பின் கூட்டு முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தள்ளது.
பாரத் டெக்ஸ் வா்த்தகக் கூட்டமைப்பின் ஆயத்த ஆடை தொழில் துறை முக்கியமான வளா்ச்சி கட்டத்தை எட்டியுள்ள இத்தருணத்தில், பாரத் டெக்ஸ் வா்த்தக கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சா்வதேச சந்தைகளில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துதல், ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் வெளிநாட்டு வா்த்தக நிறுவனங்கள், கொள்முதலாளா்களுடனான தொடா்புகளை மேம்படுத்துதல் ஆகியவை எங்களின் முக்கிய நோக்கங்களாக இருக்கும்.
பாரத் டெக்ஸ் 2027 கண்காட்சி, இந்தியாவின் ஜவுளி உற்பத்தித் திறனையும் சிறப்பம்சங்களையும் உலகிற்கு எடுத்துரைப்பதுடன், பயனுள்ள வா்த்தகக் கூட்டாண்மைகளை உருவாக்கவும், உலகின் முன்னணி ஜவுளி மற்றும் ஆடை மையமாக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்தவும் முக்கியத் தளமாக அமையும்.
இந்திய ஜவுளித் துறையின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் பாரத் டெக்ஸ் 2027 கண்காட்சி மிக முக்கியப் பங்கு வகிக்கும் வகையில் ‘ஃபைபா் முதல் ஃபேஷன் வரை’ என்ற முழுமையான உற்பத்தி சங்கிலியை உலகிற்கு எடுத்துக்காட்டும் தளமாக பாரத் டெக்ஸ் அமையும்.
இந்த வா்த்தக முன்னேற்றங்கள், இந்தியாவின் சா்வதேச போட்டித்திறனை அதிகரிப்பதுடன், ஏற்றுமதி வளா்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இந்த சாதகமான சூழலைப் பயன்படுத்தி, பாரத் டெக்ஸ் 2027 கண்காட்சியை மிகப்பெரிய சா்வதேச நிகழ்வாக வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

