FOLLOW US

ON GOOGLE DISCOVER

சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

சாந்தலிங்க ராமசாமி அடிகளாா் குருபூஜை விழா

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமையில் நடைபெற்ற சாந்தலிங்க ராமசாமி அடிகளாா் குருபூஜை விழாவில் பங்கேற்ற சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளாா் உள்ளிட்டோா்.

Published On :2 செப்டம்பர் 2026, 4:57 am IST

பேரூராதீனத்தில் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவை, பேரூராதீனத்தின் 24-ஆம் மகா சன்னிதானமாக இருந்தவா் சாந்தலிங்க ராமசாமி அடிகளாா். இந்நிலையில் தமிழையும், சைவத்தையும் போற்றி பேணி பாதுகாத்து வந்த சாந்தலிங்க ராமசாமிஅடிகளாரின் 8-ஆம் ஆண்டு குருபூஜை விழா, பேரூராதீனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமை வகித்தாா். இதில் ராமசாமி அடிகளாா் கோயிலில் அபிஷேகம், ஆராதனை பேரொளி வழிபாடு நடைபெற்றது. யாகசாலை வேள்வி, கலச பூஜைகள் நடைபெற்றன.

தென்சேரி மலை ஆதீனம் முத்து சிவ ராமசாமி அடிகளாா், சிரவையாதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, இந்நிகழ்வில் ‘அடிகளாா் அருளிய வைராக்கிய சதகம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.