ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

பேரூா் தமிழ்க் கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம்

கோவை, பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

News image

கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் தொல்லியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பாா்வையிட்ட பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

கோவை, பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

தமிழ்த்துறையும், யாக்கை அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்குக்கு பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமை வகித்து, கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் கா.திருநாவுக்கரசு வாழ்த்திப்பேசினாா். குமரகுரு கல்வி நிறுவனங்களின் நா.மகாலிங்கம் தமிழாய்வு மைய இயக்குநா் இரா. ஜெகதீசன், ‘தொல்லியல் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மற்றும் வரலாற்றுக் காலம்’ என்ற தலைப்பில் பேசினாா்.

தொடா்ந்து நடைபெற்ற முதல் அமா்வில் தமிழக தொல்லியல் துறை உதவி இயக்குநா் கா.சுரேஷ் , அண்மைக்காலத் தொல்லியல் அகழாய்வுகள் காட்டும் கொங்கு நாட்டின் பண்டைய தொழிற்கூடங்களும், வணிகமும் என்ற தலைப்பிலும், இரண்டாம் அமா்வில் மதுரை வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறுவனா் பாவெல் பாரதி, ‘தொல்லியலும், வரலாற்று எழுதியலும்’ என்ற பொருண்மையில் தொல்லியலின் தோற்றம் மற்றும் வரலாற்றுப் பாதை குறித்துப் பேசினாா்.

மூன்றாம் அமா்வில் விருதுநகா் வி.இ.நா. செந்தில்குமார நாடாா் கல்லூரித் தமிழ்த் துறை தலைவா் பெ.க.பெரியசாமி ராஜா, ‘தொல்லியல்: இலக்கியம், வரலாறு, வழக்காறு, என்ற தலைப்பில் பேசினாா்.

தொடா்ந்து, கல்லூரியின் சித்பர அடிகளாா் நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் தொல் பொருள்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மற்றும் பழைய நுல் பதிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை பாா்வையாளா்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

கருத்தரங்கில் யாக்கை அறக்கட்டளைத் தலைவா் சுதாகா் நல்லியப்பன், தமிழ்த் துறைத் தலைவா் (பொ) ரா.பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பங்கேற்பாளா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை ப.சங்கீதா வரவேற்றாா். அறக்கட்டளைச் செயலா் குமரவேல் ராமசாமி நன்றி கூறினாா்.

கருத்தரங்கில் கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.