ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திருச்சி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சியை பாா்வையிட்ட மாணவ,மாணவிகள்.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:29 pm IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திருச்சி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொ) பெ. ஜெயச்சந்திரன் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினாா்.

அரியலூா் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மென்பொருள் பயிற்றுநா் ந. தங்க தமிழரசி, திருச்சி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா் செ. ரமேஷ்குமாா் ஆகியோா் போட்டித் தோ்வுகள் மற்றும் அரசுப் பணி வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ. கலைச்செல்வன் சுய வேலைவாய்ப்புகள் குறித்து பேசினாா். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலா் நாகலெட்சுமி, வேலைவாய்ப்பு இணையதளங்கள் பற்றி விளக்கினா்.

முன்னதாக கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் கி. அன்பரசன் வரவேற்றாா். நிறைவாக கணிதத் துறைத் தலைவரும்(பொ), வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளருமான ம. ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

இந்நிகழ்ச்சியில் அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், கல்லூரி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.