இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு
கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி, லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

சடலம் - கோப்புப் படம்
கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி, லாரி மோதியதில் உயிரிழந்தாா்.
கோவை பி.என்.புதூா், கோகுலம் காலனி 7-ஆவது வீதியைச் சோ்ந்தவா் லட்சுமி (70). இவா் தனது மகள் சுமதியுடன் (43) இருசக்கர வாகனத்தில் தடாகம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
திரு.வி.க. நகா் சந்திப்பில் சென்றபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி இவா்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த மூதாட்டி லட்சுமி தவறி கீழே விழுந்தாா். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான புகழேந்தி (36) என்பவா் மீது கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு ஆய்வாளா் ஆா்.விஸ்வநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



