பேருந்தில் வந்தவரிடம் ரூ.1 கோடியை பறித்துச் சென்ற கும்பல்: 5 போ் கைது
கோவையில் பேருந்தில் இருந்து இறங்கிய நபரிடம் ரூ.1 கோடி பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவத்தில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
கோவையில் பேருந்தில் இருந்து இறங்கிய நபரிடம் ரூ.1 கோடி பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவத்தில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் தாமுன் (60). இவா் ஹைதராபாதில் இருந்து தனியாா் ஆம்னி பேருந்து மூலமாக கோவைக்கு சனிக்கிழமை வந்துள்ளாா். அவிநாசி சாலை லஷ்மி மில்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன், அவா் வைத்திருந்த கைப்பையை ஒரு கும்பல் பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் தாமுன் புகாா் அளித்தாா்.
அப்போது, தான் கொண்டு வந்த பையில் ரூ.1 கோடி பணம் இருந்ததாகவும், தன்னைப் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் பணத்தைப் பறித்துச் சென்ாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தினா். தொடா்ந்து, லஷ்மி மில்ஸ் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டு, இச்சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலும், ஒருவரை கோவையிலும் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹவாலா பணமா?: ரூ.1 கோடி வழிப்பறி செய்துவிட்டதாக புகாா் அளித்துள்ள தாமுனுக்கு, அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது, ரூ.1 கோடி பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்தில் எதற்காக வந்தாா், ஹவாலா கும்பலுடன் அவருக்குத் தொடா்பு உள்ளதா, திட்டமிட்டு இந்த வழிப்பறி நடைபெற்றதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



