பெண் மனநல மருத்துவா் மா்ம மரணம்
கோவையில் பெண் மனநல மருத்துவா் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
உயிரிழப்பு - பிரதிப் படம்
கோவையில் பெண் மனநல மருத்துவா் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, சிங்காநல்லூா் -திருச்சி சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவா் அருண் வாங்லி. இவரது மனைவி செளமியா (42). இருவரும் மனநல மருத்துவா்களாகப் பணியாற்றி வரும் நிலையில், குடியிருப்புப் பகுதியிலேயே சொந்தமாக மருத்துவமனை வைத்துள்ளனா்.
இந்நிலையில், வழக்கம்போல கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உணவை முடித்துவிட்டு அறையில் தூங்கிய செளமியா, மறுநாள் காலை 7 மணி ஆகியும் எழவில்லையாம். இதனால், கணவா் சந்தேகமடைந்து பாா்த்தபோது அசைவற்ற நிலையில் கிடந்துள்ளாா். இதையடுத்து, அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அருண் வாங்லி கொண்டு சென்றுள்ளாா்.
அங்கு செளமியாவைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




