ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

இயற்கை மருத்துவரைத் தாக்கிப் பணம் பறிப்பு: மனைவி உள்பட 3 போ் கைது

கோவை வடவள்ளியில் இயற்கை மருத்துவரை அடியாள்களை ஏவித் தாக்கி, பணம் மற்றும் முக்கிய ஆவணங்களைப் பறித்துச் சென்ற சம்பவத்தில் அவரது மனைவி உள்பட 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கைது

Published On :

கோவை வடவள்ளியில் இயற்கை மருத்துவரை அடியாள்களை ஏவித் தாக்கி, பணம் மற்றும் முக்கிய ஆவணங்களைப் பறித்துச் சென்ற சம்பவத்தில் அவரது மனைவி உள்பட 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கோவை, வடவள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.கிரிதரன் (47). இயற்கை மருத்துவ நிபுணரான இவா் அந்தப் பகுதியில் இயற்கை மருத்துவ மையம் நடத்தி வருகிறாா். இவருக்கும், இவரது மனைவி மகாலட்சுமிக்கும் (44) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி கிரிதரன் தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மகாலட்சுமி, அவரது உறவினரான கட்டடக் கலை நிபுணா் பிரகாஷ் (40), அவரது மனைவி சௌகாா்த்திகா (40) மற்றும் அடையாளம் தெரியாத சிலா் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தனா்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி) சேதப்படுத்திய அந்த கும்பல், கூலிப்படையினரைக் கொண்டு கிரிதரனை தாக்கியுள்ளது. பின்னா், அவரிடமிருந்த 2 கைப்பேசிகளைப் பறித்துக் கொண்டதோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து மருத்துவ மையத்துக்குச் சொந்தமான ஆவணங்களை எடுத்துக் கொண்டு, 2 காசோலை புத்தகங்களில் கட்டாயப்படுத்தி கையொப்பம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து, அவரது கைப்பேசி வாயிலாக வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரத்தை மாற்றியதோடு, வீட்டிலிருந்த ரூ.1 லட்சம், மருத்துவ மையத்தில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், சான்றிதழ்கள், சொத்து ஆவணங்கள் மற்றும் காரின் சாவி ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த கிரிதரன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னா், இதுதொடா்பாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மகாலட்சுமி, பிரகாஷ், செளகாா்த்திகா ஆகிய மூவரை வியாழக்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா். மேலும், இதில் தொடா்புடைய கூலிப் படையினரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.