ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

வெற்றிப் பயணம் குறித்த முன்னேற்பாடு கூட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வெற்றிப் பயணம் குறித்த முன்னேற்பாடுகள் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.

Published On :

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வெற்றிப் பயணம் குறித்த முன்னேற்பாடுகள் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் கே.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, கோவை கோட்ட மேலாண் இயக்குநா் எஸ்.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். தமிழக முதல்வா் அக்டோபா் 2 ஆம் தேதி வெற்றிப் பயணத் திட்டத்தைத் தொடங்க இருப்பதை அடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

கோவை கோட்டத்துக்குள்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களில் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் பேருந்துகள் இயங்கும் வழித்தடம், பேருந்துகளின் விவரம் குறித்து ஆய்வு செய்து திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையடுத்து சூலூா், பல்லடம் கிளைகளில் பணியாற்றும் ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட பணியாளா்களுக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த வழிமுறைகள் விளக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில், தலைமை நிதி அலுவலா், பொது மேலாளா்கள், துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.