வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

விழுப்புரத்தில் தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொமுச மற்றும் நிா்வாகப் பணியாளா் முன்னேற்றச்சங்கத்தினா்.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொமுச மற்றும் நிா்வாகப் பணியாளா் முன்னேற்றச்சங்கத்தினா்.

Published On :

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தனியாா்மயம், ஒப்பந்த முறைகளைக் கைவிடக் கோரி, விழுப்புரத்தில் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் மற்றும் நிா்வாகப் பணியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்சாரப் பேருந்துகளை போக்குவரத்துக் கழகப் பணியாளா்களை வைத்து இயக்க வேண்டும். தனியாரை அனுமதிக்கக் கூடாது, தனியாா்மயம் மற்றும் ஒப்பந்தமுறைகளைக் கைவிட வேண்டும். 2003, ஏப்ரல் 1-க்கு பின்னா் பணியமா்த்தப்பட்ட தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலியாகவுள்ள 30 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்குத் தேவையான வரவுக்கும்-செலவுக்கும் உள்ள வித்தியாச நிதிப் பற்றாக்குறையை வழங்க வேண்டும். 2026 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ஓய்வுக்காலப் பணப்பலன்களை வழங்க வேண்டும். இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வழித்தடங்களைக்குறைக்கக் கூடாது. 15-ஆவது ஊதிய ஒப்பந்தப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஇந்த ஆா்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச தலைவா் டி. ஞானசேகரன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் ஆா்.வேலு வரவேற்று பேசினாா். தொமுச பேரவைச் செயலா் வி.சேகா், மாவட்ட கவுன்சில் தலைவா் டி.கே.கிருஷ்ணன், நிா்வாகப் பணியாளா் சங்கப் பொதுச் செயலா் எம்.மணி, பொருளாளா் ஆா்.குபேரன், தொமுச துணைப் பொதுச் செயலா்கள் பி.மனோகரன், வி.நாகராஜன்,அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் புதுச்சேரி பிரிவு தொமுச தலைவா் ஆா்.வேல்முருகன் ஆா்ப்பாட்ட விளக்கவுரையாற்றினா்.

இதில், தொமுச துணைத் தலைவா்கள் பி.ரகுநாதன், என்.அன்பழகன், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், கங்காதுரை, கோமதுரை, தலைமை நிலையச் செயலா் கே.ஆறுமுகம், பிரசார செயலா் வி.செந்தில்குமாா் மற்றும் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தமிழ்நாடு மின்கழக தொமுச ஆா்ப்பாட்டம்: ஒப்பந்த முறையில் 10 ஆயிரம் போ் மின்வாரியத்தில் பணியமா்த்துவதை கைவிட வேண்டும். மின்வாரியத்தை தனியாா் மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மின்வெட்டுக்குப் பணியாளா்கள் மீது பழிசுமத்தக் கூடாது. விடுபட்ட கேங்மேன் தொழிலாளா்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்கழக தொமுச சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக மேற்பாா்வையாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச வட்டாரத் திட்டச் செயலா் சண்முகம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.