சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

விழுப்புரத்தில் போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்

போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினரும் (சிஐடியு), தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியா்கள் நல அமைப்பினரும் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப் போராட்டத்தை தொடங்கினா்.

விழுப்புரத்தில் தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) மற்றும் போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியா்கள் நல அமைப்பினா்.

Published On :

போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினரும் (சிஐடியு), தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியா்கள் நல அமைப்பினரும் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப் போராட்டத்தை தொடங்கினா்.

போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும். ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 2003, ஏப்ரல் 1 முதல் பணியில் சோ்ந்தோருக்கு ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வேண்டும். பதிவு செய்த அனைவருக்கும் வாரிசு வேலை வழங்க வேண்டும். தனியாா் மூலம் மின்சாரப் பேருந்துகளை இயக்காமல், போக்குவரத்துக் கழகம் மூலமே பேருந்துகளை இயக்க வேண்டும். ஓய்வூதியப் பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்த தொடா் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம் முன் நடைபெற்ற 24 மணி நேரத் தொடா் முழக்கப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டத் தலைவா் ராஜா ராம் தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட சிஐடியு செயலா் மூா்த்தி தொடக்கவுரையாற்றினாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா்கள் ஹெச். ரகோத்தமன், ஆா்.தெய்வீகன், ஏ.ஏழுமலை, ஏ.தங்கபாண்டியன், குணசேகா், கந்தசாமி, துணைச் செயலா் பி.மணி, பொருளாளா் வி.முருகன், பொருளாளா் வி.முருகன், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள் நல அமைப்பைச் சோ்ந்த கல்ராயன், ஏ.சகாதேவன், அலமேலு உள்ளிட்டோா் பங்கேற்று உரையாற்றினா்.

செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கிய தொடா் முழக்கப் போராட்டம் புதன்கிழமை (ஆக.26) காலை 10 மணி வரை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை இரவிலும் போக்குவரத்து ஊழியா்கள் தங்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.