
கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து! விடுமுறையால் தப்பிய மாணவர்கள்!
கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி...

கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து - DIN
கோவையில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாள் என்பதால் பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
கோவை, துடியலூர் அடுத்து உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பிரபல தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 12-ஆம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று பள்ளியின் ஒரு பகுதியில் பயன்படுத்தப்படாத பழைய மர நாற்காலிகள், மேஜைகள் மற்றும் மரச் சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து திடீரென அடர்ந்த புகையுடன் தீ பற்றி எரியத் தொடங்கியது.
பள்ளியில் இருந்து புகை மற்றும் தீப்பற்றி எரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்புப் படையினர் மற்றும் துடியலூர் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ மற்ற வகுப்பறைகளுக்கும் பள்ளி வளாகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கத் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் தீவிரமாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இருப்பினும், அந்த அறையில் இருந்த பழைய நாற்காலிகள் மற்றும் மேஜைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் வகுப்பறைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Fire at a private school in Coimbatore! No injuries due to the holiday!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





