
சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்: 656 விண்ணப்பங்கள் பெறப்பட்டன
கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்காக நடைபெற்ற வங்கிக் கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாமில், 656 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்
கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்காக நடைபெற்ற வங்கிக் கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாமில், 656 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சாலையோர வியாபாரிகளுக்காக நடைபெற்ற வங்கிக்கடன் பெறும் லோக் கல்யாண் மேளா’சிறப்பு முகாமில் 656 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கிழக்கு மண்டலத்தில் 140 விண்ணப்பங்கள், மேற்கு மண்டலத்தில் 145, தெற்கில் 132, வடக்கில் 118, மத்திய மண்டலத்தில் 121 விண்ணப்பங்கள் என மொத்தம் 656 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






