மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரிக்கு சிறப்பு விருது

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரிக்கு தென்னிந்திய அளவிலான சிறப்பு விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

Published On :

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரிக்கு தென்னிந்திய அளவிலான சிறப்பு விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

 டேட்டா குவெஸ்ட் என்னும் ஆங்கில தகவல் தொழில்நுட்ப நாளிதழ் இந்த விருதை வழங்கியுள்ளது.

 ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை இந்த நாளிதழ் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

 இந்த விருதை குவாய் நிறுவன உயர் அதிகாரி விக்ரம் சலுஜா வழங்க, செங்குந்தர் பொறியியல் கல்லூரிச் செயலர் எஸ்.சிவானந்தன் பெற்றுக்கொண்டார்.

 இந்த விழாவில், ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரிக்கு தென்னிந்திய அளவில் சிறந்த மாணவர்களை கொண்ட தனியார் கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் வேலைவாய்ப்பு விகிதம், பணியில் மாணவர்கள் சிறந்து விளங்குதல், கல்லூரி, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு, செயல்பாடுகள், கல்லூரி வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு, கல்வி கற்பதற்கு சாதகமான சூழ்நிலைகள், மாணவர்களின் மேலாண்மைத் திறன், கல்லூரியின் உள் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.